ETV Bharat / state

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பொழிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட நட்சத்திரம் - கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பொழிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட நட்சத்திரம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துளளது.

The gigantic star set in the Pozhikarai  for Christmas
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பொழிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நட்சத்திரம்
author img

By

Published : Dec 22, 2020, 4:49 PM IST

கன்னியாகுமரி: கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் விழா இரண்டு நாட்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் அதற்கு ஆயத்தமாக தங்களது வீட்டில் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைப்பது, வீட்டின் முன் நட்சத்திரங்களை இடுவது போன்ற பல்வேறு வகையான அலங்கரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பொழிக்கரை மீனவ கிராமத்தில் 35 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட நட்சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நட்சத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.கடந்த 15 ஆண்டுகளாகவே இதுபோன்ற நட்சத்திரத்தை தங்கள் ஊரில் அமைத்து, வடம் இழுக்கும் போட்டி, கட்டுமரப்போட்டி போன்றவைகள் நடத்தி கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்து வருவதாக பொழிக்கரையைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பொழிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட நட்சத்திரம்

மேலும், இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட இந்தப் போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தின்பண்டங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் - புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.