ETV Bharat / state

காலால் ஸ்டீரிங்கை சுழற்றி மேக்சி கேப் வாகனம் ஓட்டிய இளைஞரின் வீடியோ வைரல்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே காலால் ஸ்டீரிங்கை சுழற்றி ஆபத்தான முறையில் மேக்சி கேப் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரின் வீடியோ வைரலாகியுள்ளது.

Driving violence video viral  குமரி இளைஞர் வைரல் வீடியோ  தக்கலை இளைஞர்  காலால் ஸ்டீரியங்கை ஓட்டிய இளைஞர்  குமரி மாவட்டச் செய்திகள்  தக்கலை வீடியோ வைரஸ்  தக்கலை டிரைவர் வீடியோ  thakkalai driver video
காலால் ஸ்டீரியங்கை சுழற்றிய மேக்சி கேப் வாகனம் ஓட்டிய இளைஞர் வீடியோ வைரல்
author img

By

Published : Aug 28, 2020, 4:28 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ என்பவர், சொந்தமாக மேக்சி கேப் வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மேக்சி கேப் வாகனத்தில் குத்து பாட்டை இசைக்கவிட்டு ஸ்டீரிங்கை காலால் சுழற்றி சாகச பயணம் மேற்கொண்டார்.

ஆபத்தான பயணம் செய்த இளைஞர் வீடியோ

இது தொடர்பான வீடியோவை அவரது நண்பர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதைத்தொடர்ந்து போக்குவரத்துவ விதிமுறைகளை மீறி போக்குவரத்து நெரிசலான தக்கலை அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் சாகச பயணத்தில் ஈடுபட்ட பிரிட்டோ மீது தக்கலை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் கவலைக்கிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.