ETV Bharat / state

ஆளுநராக இருப்பதால் மதம் சார்ந்து பேச முடியாது - தமிழிசை செளந்தரராஜன் - மதநம்பிக்கை

அனைத்து மதநம்பிக்கைகளுக்கும் பாகுபாடின்றி சமமாக அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 11, 2022, 5:37 PM IST

ஸ்ரீகிருஷ்ணசுவாமி திர்க்கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷணசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி திர்க்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“பெண்களுக்காக மிகப்பெரிய கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் பாரதி ஜி 20 மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் ஜி 20 உலக மாநாட்டில் இந்தியா தலைமை தாங்கும் செய்தியை கிராமந்தோறும் எடுத்துரைக்க வேண்டுமென்று கூறினார். தமிழ்நாட்டில் 4 இடங்களிலும், ஹைதராபாத்தில் 6 இடங்களிலும், புதுவையில் 1 இடத்தில் என மொத்தம் 200 மாநாடுகள் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இளைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்த முடியும். ஆளுநராக இருப்பதால் மதம் சார்ந்து பேசமுடியாது அனைத்து மதநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைச் சொல்கிறேன். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை என்பதற்கு தனக்கு விடை கிடைக்காமல் உள்ளது. எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்.

தொடர்ந்து, சென்னை மேயர் பிரியா, முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்தவர், “பாரதி பிறந்த மண்ணில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் சென்னை மேயர் விருப்பட்டுதான் வாகனத்தில் தொங்கியபடி சென்றாரா என்பது தெரியாததால் இது குறித்துக் கூற தான் விரும்பவில்லை” என தெரிவித்தார்.

குமரி மாவட்டம் தக்கலையில் காலங்காலமாக கடைபிடித்துவரும் காவல்நிலையத்தில் குற்றச்செயல்கள் குறையக் காவடி எடுப்பது குறித்து அவர் கூறுகையில், “அனைத்து மதநம்பிக்கைகளுக்கும் பாகுபாடின்றி சமமாக அங்கீகாரம் அரசாங்கங்கள் கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி , பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த மாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சத்துணவில் அழுகிய முட்டை என அண்ணாமலை புகார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.