கன்னியாகுமரி: தக்கலை அருகே வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் விழாவில் பேசும் போது, குமரிக்கு வரும்போது தாய்வீட்டிற்கு வந்த குழந்தையை போல எனது மன எண்ணம் இருக்கும் ஆளுனராக இருந்தாலும் நான் தமிழகத்தில் பண்பாட்டை மீட்டெடுப்பதில் என்றும் தனது பங்கு இருக்கும் என்றும் கூறினார்.
தனது வீட்டின் பக்கத்து வீட்டில் இருங்கும் ஒருவர் ரம்ஜான் கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லுவார் ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டார் அவரவர் நம்பிக்கை மதிக்கபடவேண்டும் ஆனால் பெரும்பான்மையினரின் நம்பிக்கை அவமதிக்கபடும்போது நாம் எழுச்சி கொள்ளவேண்டும் என்றும் பேசினார்.
தர்மம் என்ற தேர் எரியாமல் இருக்கவேண்டுமென்றால் பல கண்ணன்கள் உருவாகவேண்டும். ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை தமிழை வேறுயாரெல்லாமோ வளர்த்தார்கள் என தெரிவிப்பது தவறு. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்தார்கள் உயிரையும் உடலைமும் போல் தமிழகத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது.
அவநம்பிக்கை என கூறிவிட்டு சிலபேர் வீட்டில் உள்ளவர்களை வைத்து சாமி கும்பிட வைப்பார்கள். நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்ளும் சிலர் ராகுகாலம் நல்லநேரம் பார்த்துதான் அனைத்து நிகழ்வுகளையும் ஆரம்பிக்கிறார்கள் எனவும் பேசினார்.
இதையும் படிங்க:ஆ. ராசா மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி