கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக முதற்கட்டமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. பின்னர் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்.கே.ஜி. வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு பிரைமரி & நர்சரி பள்ளிகள் நலச்சங்கம் சார்பாக 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் முதற்கட்டமாக தொடங்க வேண்டும். இரண்டாம் கட்டமாக எல்கேஜி, யு.கே.ஜி. மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வேண்டும்.
இது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் குறிப்பாக மழலையர் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பெரும்பாலோனோர் ஊதியம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு நிவாரணத் தொகையை வங்கிலோ அல்லது பள்ளி நிர்வாகம் வாயிலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.
இதையும் படிங்க...அடுத்த இரு தினங்கள் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை!