ETV Bharat / state

'திமுகவை நம்பி தமிழ்நாடு பெண்கள் செல்லக்கூடாது'- வானதி சீனிவாசன் - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பிரச்னையின்போது ட்வீட் போடும் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இருக்கும் திமுகவில் பூங்கோதை பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது அம்பலமாகியுள்ளது. அப்படிப்பட்ட திமுகவை நம்பி தமிழ்நாடு பெண்கள் போகக்கூடாது என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

bjp vanathi srinivasan
'திமுகவை நம்பி தமிழ்நாடு பெண்கள் செல்லக்கூடாது'- வானதி சீனிவாசன்
author img

By

Published : Nov 27, 2020, 7:59 PM IST

நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவியின் மகள் திருமணம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். அதன்பின்பு செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், " மோடி அரசு பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ள நிலையில், அந்தத்திட்டத்தை வீடு வீடாகச் சென்று பெண்களிடம் விளக்கிக்கூறி அவர்களை கட்சியில் ஈடுபடுத்தும் பணியை பாஜக மகளிரணி மேற்கொண்டு வருகிறது.

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிவோரை தண்டிப்பதற்காக மோடி போக்சோ சட்டத்தை கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாது, வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பணியிடங்களில் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிக் குழு அமைக்க வேண்டும் என சட்டம் இயற்றினார்.

மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசு, ஊடகங்கள் உள்ளிட்டவை இணைந்துதான் பெண்கள் மீதான பிரச்னைகளைத் தடுக்கமுடியும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு என தனி காவல்நிலையம், நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டாலும் பெண்களுக்கு நியாயம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளேன்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. அதுபோல, தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம். குடும்ப அரசியலில் இருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதுதான் பாஜகவின் நோக்கம். வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பிரச்னையின்போது ட்வீட் போடும் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இருக்கும் திமுகவில் பூங்கோதை பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது அம்பலமாகியுள்ளது. அப்படிப்பட்ட திமுகவை நம்பி தமிழ்நாடு பெண்கள் போகக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: குமரியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.