ETV Bharat / state

தமிழ் அன்னைக்கு 12 அடியில் சிலை வைக்க முயற்சி! - kanyakumari tamil conference

நாகர்கோவில்: பரப்பாடியில் நடைபெற்ற தமிழன்னை என்னும் தமிழ்ச் சங்க பொதுக்கூட்டதில், தமிழ் அன்னைக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்று, தமிழ்அறிஞர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
author img

By

Published : May 12, 2019, 8:46 PM IST

கன்னியாகுமாரி மாவட்டம், பரப்பாடியில், தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், விவேகானந்த கேந்திரா இடத்தில் நடைபெற்றது. அதில் தமிழ் அன்னைக்கு சிலை கட்டுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் கூறும்போது, "கன்னியாகுமரியில் தமிழ் வழி கல்வி தேய்ந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும்வகையில் திருநெல்வேலியில் 12 அடியில் தமிழன்னைக்கு சிலை வைத்து கோயில் கட்டப்படவுள்ளது. அங்கு தமிழ் மொழியில் வழிபாட்டுமுறை நடத்துதல், மேலும் கோயில் வளாகத்தில் தமிழ் நூலகம், தமிழ் மருத்துவ மையம் போன்ற சிறப்பு அமசங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இதனை முன்னிட்டு அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும். அதற்காக தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம்" என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பத்மநாபன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

Intro:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பரப்பாடியில் தமிழ் அன்னைக்கு ஆலயம் அமைக்க வேண்டும் தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

Body:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பரப்பாடியில் தமிழ் அன்னைக்கு ஆலயம் அமைக்க வேண்டும் தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு அவ்வமைப்பின் நிறுவனத் தலைவர் கருங்கல் கண்ணன் தலைமை வைத்தார். இந்நிகழ்ச்சியில் சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், வரலாற்று ஆய்வாளர் பத்மநாபன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தக் அமைப்பின் நோக்கம் தமிழ் அன்னைக்கு தமிழகத்தில் ஆலயம் எழுப்புவது எனவும் இதற்காக அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பரப்பாடியில் தமிழன்னைக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்க வேண்டும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடத்த வேண்டும் .தமிழன்னைக்கு 12 அடி உயரத்தில் சிலை அமைப்பதுடன் தமிழ் மொழியில் வழிபாட்டுமுறை நடத்த வேண்டும். இந்த வளாகத்தில் நூலகம், சித்த மருத்துவ கல்லூரி மூலிகைப்பண்ணை, கலைக்கூடம் ,தமிழ் மருத்துவ மையம் ஆகியவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் கூறும்போது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி உள்ளது சித்த மருத்துவக் கல்லூரி அமையாதது வருத்தமளிக்கிறது. இங்குதான் உலகத்திலேயே எங்குமே கிடைக்காத அரிய வகை மருந்துகள் கிடைக்கக்கூடிய செடி வகைகள் உள்ள மருந்துவாழ் மலை உள்ளது. இங்குதான் 42 வகையான வாழைப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழங்கள் பலாப் பழங்கள் அதிகமாக கிடைக்கின்றன .மேலும் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் எதற்காக பிரிந்தது என்று நினைக்கும் போது கேரளாவில் மலையாளத்திற்கு கீழ் தமிழ் அடிமையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அது இன்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழி கல்லூரி முக்கியத்துவம் குறைந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது. எனவே இப்போது உள்ள காலகட்டத்தில் கண்டிப்பாக தமிழன்னைக்கு ஆலயம் எழுப்பி அதில் பல்வேறு நூலகங்கள் அமைப்பது காலத்தின் கட்டாயம் எனவே தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழின் முக்கியத்துவத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.