ETV Bharat / state

கன்னியாகுமரியில் மீண்டும் படகு போக்குவரத்து தொடக்கம்! - திருவள்ளூர் சிலை

கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

sundaram
sundaram
author img

By

Published : Nov 25, 2020, 1:03 PM IST

சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளூர் சிலை உள்ளது. அங்கு பயணிகள் படகுகளில் சென்று கண்டுகளித்து வருவது வழக்கம்.

கன்னியாகுமரியில் மீண்டும் படகு போக்குவரத்து தொொடக்கம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் படகு போக்குவரத்தை இயக்க வேண்டும். புதிய படகுகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இயக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்து இன்று (நவ.25) தொடங்கப்பட்டது.

இந்தப் படகு போக்குவரத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.