ஹரியனாவை தலைமையிடமாகக் கொண்ட தஹல் (Tahal) என்ற தனியார் பைப் நிறுவனத்திற்கு பெங்களூரு, நாகா்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் தொழிற்கூடங்கள் உள்ளன. இந்நிறுவனம் ஜி எஸ் டி வரிஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் ஐந்திற்கும் மேற்பட்ட ஜி எஸ் டி அதிகாரிகள் நாகர்கோவில் புதேரியில் உள்ள பராசக்தி கார்டனில் அமைந்துள்ள நிறுவனத்தின் அலுவகலத்தில் சுமார் ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரிஏய்ப்பு செய்ததாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறபட்டது.
இதையும் படிக்க: வேளாண்மை மாணவர்கள் விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல்!