ETV Bharat / state

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்; அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை!

Farmers grievance day: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் சேதமைடந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 17% இருந்து 22% அதிகரித்து தர கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 8:30 AM IST

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று (அக்.20) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையங்களில். நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருக்கிறது எனக் கூறி நிராகரிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி பேசுகையில், “குமரி மாவட்டத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பரசேரி, வில்லுக்குறி பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

எனவே, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதுபோல் நெல் விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன.

அசல் சம்பா ரகம் நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் குறைவான மகசூல் கிடைக்கிறது. மற்ற ரக நெல்களை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஒன்றரை மேனி முதல் 2 மேனி வரை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட்டு வருகிறார்கள். பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்றால், அதிகாரிகள் அதனை எடுக்க மறுத்து வருகின்றனர். நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருப்பதால், அந்த நெல்மணிகளை உலர வைத்துக் கொண்டு வர விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர்.

ஆனால், தற்போது மழை பெய்து வருவதால், நெல் மணிகளை உலர வைப்பதற்கு போதிய இடம் விவசாயிகளிடம் இல்லை. அரசு தரப்பிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை உலர வைப்பதற்கான இடம் கொடுக்க வேண்டும். ஆனால் அரசு தரப்பில் அந்த வசதியும் செய்து கொடுக்காததால், நெல்மணிகளை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

எனவே, நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். காரவிளை பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் புகுவதால், மரச்சீனி மற்றும் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 6 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பேசும்போது, “மாவட்டத்தில் 17 சதவீதத்திற்கு மேல் உள்ள நெற்பயிர்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். குமரி மாவட்டத்தில் எவ்வளவு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் எடுத்து, கிராம நிர்வாக அதிகாரியிடம் அல்லது வேளாண் துறை அதிகாரிகளிடம் வழங்கலாம். தற்போது 70 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: “ரங்கசாமி முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.