பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து சென்னையைச் சேர்ந்த ராஜலெட்சுமி மந்தர் (35) என்ற பெண் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின் முன்பிருந்து பைக்கில் சென்னைவரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.
இந்த பேரணியில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வழியாக சுமார் ஆயிரத்து 200 கி.மீ செல்லும் இந்த விழிப்புணர்வு பேரணியானது சென்னையில் வருகிற 29ஆம் தேதி நிறைவடைகிறது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக பேரணி!