கன்னியாகுமரி மாவட்டத்தில், வரலாற்று சிறப்புமிக்க சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி திருவிழா பத்து நாட்கள் கோலாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பத்து நாட்கள் திருவிழாவிலும் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி ஆகிய சாமிகள் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.
மேலும், சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் உளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தத் திருவிழாவானது வரும் 13ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது.