கன்னியாகுமரி: மண்டைக்காடு நடுவூர்கரை சேர்ந்தவர் லில்லி ஜனட். இவர் கடந்த 14ஆம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் பக்கத்து வீட்டை சார்ந்த ஐயாதுரை என்பவர் சில நபர்களுடன் சேர்ந்து கோயில் ஒன்றை கட்ட முயற்சிப்பதாகவும் தட்டிக்கேட்ட தன்னை மிரட்டுவதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு 24ஆம் தேதி அன்று மண்டைக்காடு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் சம்பந்தபட்ட லில்லி ஜனட் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லில்லி ஜெனட் காவல்துறையினர் வந்த தகவலை தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்து கொண்டிருந்த போது, உதவி ஆய்வாளர் முரளிதரன் லில்லி ஜனட் ஐ அடிக்க முயன்றதோடு அவரது கையில் இருந்த செல்போணையும் பறிக்க முயன்றுள்ளார்.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், உதவி ஆய்வாளர் முரளிதரனை மண்டைக்காடு காவல் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலில் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கானா பாட்டு பாடி தானா வந்து சிக்கிய திருடன்