சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற யோகா நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியிருந்தது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பயோனியர் பள்ளியில் யோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது இடங்களிலும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார்.
திண்டுக்கல் காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 550க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.