கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக காவல்துறையினரின் ரோந்து வாகன தொடக்க விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, 'கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் 'பீட் சிஸ்டம்' மீண்டும் அமல்படுத்துகிறது. இதன்மூலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பீட்களாகப் பிரித்து காவலர்கள் ரோந்து வருவார்கள்.
இதனால் குற்றச்செயல்கள் தவிர்க்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 92 பீட்கள் உள்ளன. இதில் பணியாற்றும் காவலர்களுக்கு உடம்பில் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும்.
ரோந்து மேற்கொள்ளும் காவலர்களுக்குத் தனி வாகனம், மைக் வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மக்களுக்கு காவலர்களுக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.
இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தெரிந்துக்கொண்டு, அதை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜூன் மாதத்தில் மட்டும் 52 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 61 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 232 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும். கஞ்சா விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் இது குறித்து ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக காவல்துறை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கஞ்சா போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் யாரேனும் தவித்து வந்தால், அவர்கள் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டால் அதிலிருந்து மீள கவுன்சிலிங்கும், நடவடிக்கைகளும் மேற்கொள்ள தயாராகவுள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போலீஸை சுற்றிவளைத்த கும்பல்!