சென்னை: நாகர்கோவில் தொகுதியில் இராஜாக்கமங்கலம் ஊராட்சி தெக்குறிச்சி கடற்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர் கட்ட அரசு முன் வருமா என்று நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , “நாகர்கோவில் தொகுதி தெக்குறிச்சியில் கடற்கரை கடலரிப்பு தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மீனவ கிராமத்தில் 400 மீட்டர் தூரம் 3.5 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே அங்கு இருந்த தடுப்புச்சுவர் சேதம் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய 4 கோடி தேவைப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பணிகள் விரைவில் தொடங்கும்.
மேலும் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. அதுவும் கடலரிப்பால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதை சீரமைக்க 4.6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
எனவே 8 கோடி ரூபாய் இருந்தால்தான் இந்த பணிகள் மேற்கொள்ளலாம். எனவே கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நிர்வாக அனுமதிக்காக அரசுக்கு அனுப்பப்படும்.
மேலும், கடற்கரைப் பகுதிகளில் இந்த ஊர் மட்டுமில்லாமல், ஏற்கெனவே பூந்துறை கோவளம், அரிக்கை உள்ளிட்டப் பகுதிகளில் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைத்துள்ளோம்", என்றார்.
இதையும் படிங்க: பிகாரில் 3,000 கி.மீ., பாத யாத்திரை- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!