கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும், சுமார் 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று இரவு 9.30 மணி அளவில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெய்சங்கர் வரும் 20ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அதுவரை பாளையங்கோட்டை சிறையில் அவர்கள் அடைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து வழக்கறிஞர்கள் சிலர் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் சற்று நேரம் அங்கு சலசலப்பு நிலவியது. பின் அவர்களை காவலர்கள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவலர்களின் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு சென்றனர்.