ETV Bharat / state

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது! - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு

கன்னியாகுமரி: களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இரண்டு நபர்களை கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர்.

ssi wilson murder, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்
ssi wilson murder
author img

By

Published : Jan 14, 2020, 2:17 PM IST

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த எட்டாம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் வில்சனை கொலை செய்தது தெரியவந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல் துறை அறிவித்தது.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. அலுவலர்களும் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர். குமரி மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகள், கேரளா ஆகிய இடங்களிலும் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் என 120க்கும் மேற்பட்டோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களில் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

ssi wilson murder, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்
ssi wilson murder, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்ட அப்துல் சமீம், தவ்பீக்

இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கர்நாடக மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை பெங்களூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intro:கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் வைத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த 2 தீவிரவாதிகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.

Body:குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது 2 பேர் எஸ்.ஐ.யை கொலை செய்தது தெரியவந்தது.

இதை அடிப்படையாக வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக தமிழக, கேரளா போலீஸார் அறிவித்து தகவல் தெரிவப்போருக்கு சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

இவ்வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். குமரி மாவட்டம், மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா உட்பட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் உறவினர்கள், மற்றும் நண்பர்கள் என தொடர்பில் இருந்த 120க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியும் குற்றவாளிகளை இதுவரை நெருங்க முடியவில்லை.

தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் குற்றவாளிகள் இருவரும் அதிக தொடர்பில் இருப்பதால் 3 மாநிலங்களிலும் தனிப்படையினர் தேடும் பணியை ஈடுபட்டு வந்தனர். கொலை நடந்து 7 நாட்களை கடந்த நிலையில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படாதது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து குமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரையும் கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை பெங்களூர் அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.