ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி இளைஞரிடம் ரகசிய விசாரணை! - Srilanka Bomb Blast

கன்னியாகுமரி: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இம்ரான் கான் என்ற இளைஞரை ரகசிய விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை
author img

By

Published : Jun 21, 2019, 7:49 PM IST

2019 ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறித்தவ தேவாலயத்திலும், நட்சத்திர விடுதியிலும் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அண்மையில் கோவையில் முகாமிட்டு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (32) உட்பட 6 பேரைக் கைது செய்து கொச்சிக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் பூங்குளத்து விளை பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் (32) என்பவருக்கும், அசாருதீனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி ரகசிய விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Body:இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை மற்றும் மதுரையில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் தேசிய புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் விசாரணையில் இருக்கும் அஸாரூதீன் உடன் தொடர்புடையதாக கூறப்படும் கன்னியாகுமரி மாவட்டம் பூங்குளத்து விளை பகுதியை சேர்ந்த இம்ரான்கான் (32) என்பவரை தேசிய புலனாய்வு துறையை சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் ரகசிய விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார்கள். இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்புConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.