கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோயிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுகிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப்பகுதியில் அமைந்துள்ள நாகராஜா கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோயில் நாக தோசம் தீர்க்கும் தலமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி ஞாயிறு கிழமையை முன்னிட்டு அதிகலை முதலே கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். அங்குள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் மற்றும் பால் அபிசேகம் செய்தனர்.
இதையும் படிங்க:ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்... கே.பாலகிருஷ்ணன்...