கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8ஆம் தேதி சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அப்துல் சமீம், தவ்பிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபட்டனர். பின்னர், இவர்களை பத்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனையடுத்து இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி, கை பை ஆகியவைகளை கேரள மாநிலத்திலிருந்து காவல் துறையினர் மீட்டெடுத்தனர். மேலும் இருவரையும் கொலை நடந்த களியக்காவிளை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை சம்பவம் அரங்கேறிய தருணங்களை நடித்துக்காட்டும் நிகழ்வும் நடந்தது.
இதற்கிடையில் இன்று அப்துல் சமீம், தவ்பிக் ஆகிய இருவரையும் அழைத்து சென்ற தனிப்படை காவல் துறையினர் அவர்களின் வீடுகளில் தனித்தனியாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க... 'பொதுத்தேர்வு - மாதிரி வினாத்தாளில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது!'