சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த சௌந்தர்யா தனது கணவர் விசாகன் உடன் இன்று கன்னியாகுமரி அருகே நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். திருமணம் நல்லபடியாக நடந்ததால், இருவரும் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் , சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் செய்தனர்.
தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து தங்களது நேர்த்திக்கடனை முழுவதும் முடித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா கன்னியாகுமரி சுற்றுவட்டார கோயில்களுக்கு சென்றது ரஜினி ரசிகர்கள் மற்றும் பக்தர்களிடையே சிறிது பரபரப்பு ஏற்பட்டது.