கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2ஆயிரத்து 84 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஆயிரத்து 823 பேருக்கு கரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இதில் ஏற்கனவே ஐந்து பேர் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளைப் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி, 4 வயது ஆண் குழந்தை உள்பட ஐந்து பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஐந்து பேருக்கும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பழங்கள் கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.
வீடு திரும்பிய அனைவரும் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தனிமைபடுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று வந்த 16 பேரில் 10 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் கரோனா வார்டில் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: எட்டு பேர் குணமடைந்துள்ளனர்: நீலகிரி மாவட்ட ஆட்சியர்