ETV Bharat / state

எஸ்.ஐ. வில்சன் கொலை: குற்றவாளிகள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற கும்பல் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

si vilsen report
si vilsen report
author img

By

Published : Jan 17, 2020, 6:56 PM IST

Updated : Jan 17, 2020, 8:06 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். கொலை குற்றவாளிகள் ஜனவரி 14ஆம் தேதி கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், கர்நாடக காவல் துறை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை அலுவலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து நேற்று (ஜன.16) குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்ட அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரிடம் தக்கலை காவல் நிலையத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குழித்துறை நீதிபதி ஜெய்சங்கர் முன்பு குற்றவாளிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த மனுவை வருகின்ற 20ஆம் தேதி (திங்கள்கிழமை) விசாரிப்பதாகவும், அதுவரை கைதான இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரும் நேற்று இரவே கமாண்டோ படை பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு தனி தனி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அப்துல் சமீம், தவுபீக் இருவருக்கும் ஏற்கனவே உதவி செய்தவர்கள், அவர்களைப் போன்று குமரி மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் செயல்படுவோரை கண்டுபிடித்து கைதுசெய்வதற்கும் காவல் துறை திட்டமிட்டுள்ளது.

'சி.ஏ.ஏ.வை எதிர்த்தாலும் சட்டத்தை மீறக் கூடாது' - பினராயி விஜயனுக்கு ஆளுநர் அறிவுரை

அதே நேரம் என்ஐஏ அலுவலர்களும் தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். குமரி தனிப்படை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர் என்.ஐ.ஏ. வசம் இவ்வழக்கு ஒப்படைப்பதற்கான வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.

ஏற்கனவே எஸ்.ஐ. வில்சன் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலை, ஆயுத சட்டத்தில் தவுபீக், அப்துல் சமீம் மீது களியக்காவிளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (உபா) மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சட்டத்தில் உள்ள குற்றவாளிகளை இரண்டு மாதங்கள்வரை காவல் துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியும். இதனால் என்.ஐ.ஏ. அலுவலர்களிடம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைத்து, மறைந்திருக்கும் பல உண்மைகளைக் கண்டறிய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ.ஐ. வில்சனை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வசம் இந்த விசாரணை ஒப்படைப்பதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஃபேஸ் டிடெக்டர் மூலம் வில்சனை கொலை செய்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் என்பது தெரியவந்தது.

இவர்களை குமரி, மற்றும் கேரளா தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில் கடந்த 14ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையம் அருகில் வைத்து கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படை போலீஸாரிடம், கர்நாடக போலீஸார் குற்றவாளிகள் இருவரையும் ஒப்படைத்தனர். நேற்று குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்ட அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோரிடம் தக்கலை காவல் நிலையத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் இரவு குழித்துறை மாஜிஸ்திரேட்டு ஜெய்சங்கர் முன்பு குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டிருந்தனர்.

இந்த மனுவை வருகிற 20ம் தேதி (திங்கட்கிழமை) விசாரிப்பதாகவும், அதுவரை கைதான இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரும் நேற்று இரவே கமாண்டோ படை பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நள்ளிரவில் சிறையில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.

அப்துல் சமீம், தவுபீக் இருவருக்கும் ஏற்கனவே உதவி செய்தவர்கள் மற்றும் அவர்களை போன்று குமரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் செயல்டுவோரை கண்டுபிடித்து கைது செய்வதற்கும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர். அதே நேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

குமரி தனிப்படை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர் என்.ஐ.ஏ. வசம் இவ்வழக்கு ஒப்படைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே எஸ்.ஐ. வில்சன் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலை மற்றும் ஆயுத சட்டத்தில் தவுபீக், அப்துல் சமீம் மீது களியக்காவிளை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் (உபா) மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தில் உள்ள குற்றவாளிகளை 2 மாதங்கள் வரை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க முடியும். இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைத்து, மறைந்திருக்கும் பல உண்மைகளை கண்டறிய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.Conclusion:
Last Updated : Jan 17, 2020, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.