கன்னியாகுமரி குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின்(39).இவர், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் தொகை வசூலிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடன் தொகை வசூல் செய்வதற்காக ஒரு வீட்டுக்கு சென்ற அபிலாஷ், தான் சுகாதார ஆய்வாளர் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர், அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தார்.
இதையறிந்த அபிலாஷ் பெர்லின் தலைமறைவனார். பின்னர், சப் - இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ தலைமையிலான தனிப்படையினர் அபிலாஷை தேடி வந்த நிலையில், கொல்லங்கோட்டில் வைத்து அவரை கைது செய்தனர். இதையடுத்து, நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.