ETV Bharat / state

கல்லில் கலைவண்ணம் கண்ட கல் சிற்பத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு? - etv bharat news

உலகளவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்று விளங்கும் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடான மயிலாடி கல் சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அது குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ...

sculpture industry affected special story
கல்லில் கலைவண்ணம் கண்ட கல் சிற்பத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு?
author img

By

Published : May 11, 2020, 3:45 PM IST

இவ்வுலகத்தில் அழிந்துபோன பண்டைய நாகரிகங்களை, வரலாற்றை, பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிய பல சாதனங்கள் இருப்பினும் கடல் கொண்ட நாகரிகமாகக் கருதப்படும் தமிழர்களின் நாகரிக வளர்ச்சியைக் கற்காலம் முதல் இன்று வரை காட்டுவது கல் சிற்பங்களே. தமிழர்களின் கலைத்திறனில் முக்கிய அங்கமாக விளங்குவது கல் சிற்பக்கலை தான்.

அத்தகைய சிற்பக்கலைக்கு உலகளவில் பெயர்போனது குமரி மாவட்டத்தின் மயிலாடி ஊர். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க பொருள்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடான மயிலாடி கல் சிற்பக்கலை முதன்மை இடம் வகிக்கிறது. தரத்தையும், நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக இந்தியாவுக்கே பெருமையும் வருவாயையும் சேர்த்து தந்த மயிலாடி கல் சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால், இந்தச் சிற்பத் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால், கல் சிற்பத் தொழில் எதுவும் நடைபெறாமல் பொலிவிழந்து போயுள்ளது. சிற்பத் தொழில் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத இப்பகுதி சிற்பத் தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க கூட வழியின்றி திண்டாடி வருகின்றனர். பலர் வேலைவாய்ப்பை இழந்து தொழில் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல் சிற்பத் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் மாணிக்கம் கூறுகையில், “மயிலாடியில் தயாரிக்கப்படும் கல் சிற்பங்கள் உலகப் பிரபலமானவை. இங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு கல் சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக கல் சிற்பத் தொழில் ஏதும் நடைபெறவில்லை. இதனால் கல் சிற்பத் தொழிலை நம்பி வாழ்ந்து வந்த தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் உலகப் புகழ்பெற்ற மயிலாடி சிற்பக் கூடங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே மாநில அரசும் குமரி மாவட்ட நிர்வாகமும் மயிலாடி கல் சிற்பத் தொழிலாளர்களில் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கல் சிற்பத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். இதன்மூலம் வேலை வாய்ப்பின்றி தவித்து வரும் அவர்களின் வாழ்க்கை புது பொலிவடையும்” என்றார்.

கல்லில் கலைவண்ணம் கண்ட கல் சிற்பத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு?

ஊரடங்கை நீட்டிக்கவா? வேண்டாமா?‌ என அரசு ஆலோசிக்கும் அதேவேளையில், கல் சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிலையை நம்பியிருக்கும் இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்று தகுந்த தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவது. இயல்பாகவே சமூக இடைவெளி விட்டு செய்யப்படும் தொழிலான கல் சிற்பத்தொழிலுக்குத் தளர்வு அளித்து, அழிவின் விளிம்பில் இருக்கின்ற தங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்பைச் சரி செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல் சிற்பத் தொழிலாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.

உளியின் ஓசையால் உலகையே தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த கல் சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு காக்க முன் வரவேண்டும்.

இதையும் படிங்க : ஊரடங்கால் கிணறு வெட்ட முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முன்வருமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.