குமரி மாவட்டம், மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ராபின். இவரது மகன் ரோகித் (வயது 10), அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிறுவன் ரோகித், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலை எதிர்பாராதவிதமாக அவரை இழுத்துச் சென்றது.
இதைக் கண்டு ரோஹித்தோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறியதைத் தொடர்ந்து, அப்பகுதியினர் விரைந்து சென்று ரோஹித்தை மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள், கடல் அலை ரோஹித்தை இழுத்துச் சென்றதால், மக்களால் சிறுவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல் குழுமத்தைச் சேர்ந்த காவல் துறையினர், சிறுவனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் 27 மூட்டை குட்கா, பான் மசாலா பறிமுதல்: 2 பேர் கைது!