கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள்கள் திருவிழா ஆண்டு தோறும் நவ. 24ஆம் தேதி தொடங்கி டிச.3ஆம் தேதி வரை நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
இதில் பங்கு தந்தையர்கள், பங்கு மக்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர். திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருவிழா நாள்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான வரும் 2ஆம் தேதி இரவில் தேர்பவனி நடைபெறுகிறது. பத்தாம் நாள் திருவிழாவான 3ஆம் தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும்'