ETV Bharat / state

குமரியில் சிஏஏ-வை ஆதரித்து சத்தியாகிரகப் போராட்டம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் சிஏஏ-வை ஆதரித்து சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

caa support protest
caa support protest
author img

By

Published : Mar 15, 2020, 9:09 PM IST

குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் அதே வேளையில், இதற்கு ஆதரவாக பாஜகவினர் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்து கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில், அதன் சுற்று வட்டாரத்திலுள்ள வெள்ளாடிச்சிவிளை, வட்டவிளை, மேலசரக்கல்விளை உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள இந்து கோயில் வளாகங்களில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. பெரியோர் முதல் சிறுவர்கள் வரை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஏஏ-வை ஆதரித்து போராட்டம்

இதேபோல் வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ந்து வேறு 13 கிராமங்களில் சத்யாகிரக போராட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்குமா?' - சி.ஏ.ஏ. குறித்து அமைச்சர்களிடம் பெண் முறையீடு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.