ETV Bharat / state

கேரளாவுக்கு கடத்த முயன்ற 45 கிலோ சந்தனக்கட்டை பறிமுதல் - Kanniyakumari district News

கன்னியாகுமரி: கேரளாவுக்கு கடத்த முயன்ற 45 கிலோ சந்தனக்கட்டைகள் கடத்த முயன்ற இரண்டு பேரை இரணியல் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Sandal wood smuggling two arrested
Sandal wood smuggling two arrested
author img

By

Published : Sep 5, 2020, 10:55 PM IST

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் வழிப்பறி, அரிவாளால் வெட்டி பணம் பறித்தல், கொலை, கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இதைக் கட்டுப்படுத்த ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இரணியல் காவல் துறையினர் திங்கள்நகர் அடுத்த நெய்யூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காரை அவர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனையிட்டனர். அப்போது, காரில் சந்தனக் கட்டைகளும், அரிவாள், வெட்டு கத்தி, மிஷின் வாள் போன்ற ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் வாகனத்தைப் பறிமுதல்செய்தனர்.

பின்னர், இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து இரணியல் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் திக்கணங்கோட்டைச் சேர்ந்த வர்கீஸ், மற்றொருவர் பாறசாலையைச் சேர்ந்த சிபு என்பது தெரியவந்தது.

மேலும், மர ஆலை வைத்து நடத்திவரும் வர்கீஸ் தன்னிடமிருந்த ஆறு கிலோ சந்தனக்கட்டையும், சிபு தன்னிடமிருந்த 39 கிலோ சந்தனக்கட்டையும் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ சந்தனக் கட்டையை காவல் துறையினர் மாவட்ட வனத் துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.