கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டரின் தலைமைபதி சாமிதோப்பில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் எட்டாம் நாளான நேற்று கலிவேட்டை நிகழ்வு நடைபெற்றது.
இந்த கலிவேட்டை நிகழ்வன்று வைகுண்டர் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் கலி என்னும் தீய எண்ணங்களை அழிக்கச் செய்வார் என்பது அய்யாவழியினரின் நம்பிக்கை. இந்த நிகழ்வில் வைகுண்டர் வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.