ETV Bharat / state

சாமிதோப்பு அய்யா கோயிலில் கலிவேட்டை நிகழ்ச்சி - ayya

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமிதோப்பு அய்யா
author img

By

Published : Jun 1, 2019, 7:02 AM IST

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கடந்த 24 ஆம் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் முன்பு இருந்து கலிவேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியை குரு பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதியில் சுற்றிவந்து முத்திரிகிணற்றின் கரையை வந்தடைந்தது. அங்கு திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் "அய்யா சிவசிவா அரகரா" என்ற நாமத்துடன் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்றது. வாகனம் சென்ற வழிகளில் அப்பகுதியைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபட்டனர் .பின்னர் தலைமைப்பதியில் வடக்கு வாசலில் அய்யா பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி அளித்தார் .தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும் பெரிய யுகப்படிப்பு நடைபெற்றது .பின்னர் பக்தர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கடந்த 24 ஆம் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது .திருவிழாவின் எட்டாம் நாளான இன்று அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் முன்பு இருந்து கலிவேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .நிகழ்ச்சியை பூஜிதா குரு பாலபிரஜாபதி அடிகளார் துவக்கி வைத்தார். வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதியில் சுற்றிவந்து முத்திரிகிணற்றின் கரையை வந்தடைந்தது. அங்கு திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் "அய்யா சிவசிவா அரகரா" என்ற கோஷத்துடன் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்றது. வாகனம் சென்ற வழிகளில் அப்பகுதியைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபட்டனர் .பின்னர் தலைமைப்பதியில் வடக்கு வாசலில் அய்யா பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி அளித்தார் .தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும் பெரிய யுகப்படிப்பு நடைபெற்றது .பின்னர் பக்தர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது வழங்கப்பட்டது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.