கன்னியாகுமரி, குலசேகரம் அடுத்துள்ள திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அந்த பகுதியில் ரப்பர் ஷீட் உலர் கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் குடோனில் வழக்கம் போல் டன் கணக்கில் ரப்பர் ஷீட்டை உலர வைத்து விட்டு தொழிலாளர்கள வீட்டிற்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரப்பர் ஷீட்டுகள் மீது தீப்பொறி விழுந்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒரு டன் ரப்பர் ஷீட்க்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து குலசேகரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.