கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதியன்று இரவுப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வில்சனைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காவல் துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: