கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அம்மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் மழை பெய்து
வருகிறது.
இது தொடர்பாக இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென் தமிழ்நாடு கடற்கரை முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழ வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தென் தமிழ்நாடு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை நோக்கி பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு அரபிக்கடல், தெற்கு, வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.