கன்னியாகுமரி மாவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட புதுகிராமம் பகுதியில் சாலையை சீரமைக்க 14ஆவது மானியக் குழு மூலம் ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த சாலையை சீரமைக்கும் பணியை இன்று தொடங்குவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதற்காக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தளவாய் சுந்தரம் முன்னதாக வந்து பணியை தொடங்கிவிட்டு செல்லும்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் அவருடன் ஏன் தான் வருவதற்குள் பணியை தொடங்கியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினரே எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை சீரமைப்பு தொடக்க நிகழ்ச்சியின்போது இவர்கள் நேருக்கு நேர் கோபத்தில் கேள்வி எழுப்பிய சம்பவம் இரு கட்சியினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர்.
இதையும் படிங்க: 'ஆர்.எஸ். பாரதியை கண்டிப்பதுதான் ஸ்டாலினுக்கு அழகு' - முதலமைச்சர் அறிவுரை