கன்னியாகுமரி மாவட்டத்தில், இயற்கைவளம் பாதுகாத்தல், நெகிழி பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு, அனைவருக்கும் கல்வி, சுற்றுப்புறச்சூழல் போன்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக விடியல் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன், மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா தென்தாமரைகுளத்தில் நடைபெற்றது. இயக்கத்தின் செயலாளர் கான்ஸ்டன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் ஆண், பெண் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
பின்னர் பெண்கள், ஆண்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தற்காப்புக்கலை போட்டிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கிராமிய தற்காப்புக்கலை நிகழ்ச்சிகள், நல் உடலழகு கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.