கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகின்றனர். இதில் ஆட்டுப்பட்டி காலனி, இல்லத்தார் தெரு, கவிமணி நகர், யோகேஸ் நகர், ருக்மணி நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள சாலையோரம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் குடியிருப்புப் பகுதியில் செல்லும் பாசன கால்வாயில் சுமார் 1 கி.மீ. வரை சாக்கடை நீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகிவருகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்கள் பரவும் நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பாக தொடர்ந்து அலுவலர்களுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் மக்களை இணைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். நகர் முழுவதும் தற்போது குப்பைகளால் நிரம்பியுள்ளது. இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: கீழையூர் பாலத்தினை சீரமைக்க மக்கள் கோரிக்கை!