கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டோர்கள் அரசு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்து வருவதையடுத்து, அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில் மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்றவுடன் அவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பின்னர் அவர்கள் சிகிச்சை பெறும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று(மே.20)வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல் மிஸ்ரா, கோணம் அரசு தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க:கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்: அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு!