ETV Bharat / state

மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடி - மீனவ சங்க பிரதிநிதிகள் குற்றச்சாட்டு! - fishermen association

Fishermen's association: மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக, நாகர்கோவிலில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

fishermen's association
மீனவர் குறைதீர்க்கும் நாள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 2:02 PM IST

மீனவ சங்க பிரதிநிதி செய்தியாளர் சந்திப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மாதந்தோறும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு மீனவ அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த திட்டங்கள், மீனவர்களுக்கு அரசு செய்து தர வேண்டிய கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் நடைபெற்றபோது, அதற்கான வாக்காளர் பட்டியல் மீன்வளத்துறை அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு இருந்தது. கடத்த 2018ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தாமல் தேர்தல் நடத்தியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

பல்வேறு மீனவ சங்கங்களின் புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்திய பின்னர், அந்த தேர்தலை ரத்து செய்தது முதல் இன்று வரை அந்த நாட்களில் கொடுக்கப்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்படவில்லை என கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, மீனவ கூட்டுறவு சங்கங்களுடைய உறுப்பினர்கள் இதில் வாக்காளர்களாக இருந்து வருகின்றனர். அந்த வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் கூட பல்வேறு குளறுபடிகளை அதிகாரிகள் ஒரு சிலருக்கு சாதகமாக ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கிராமங்களிலும் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாகவும், உயிருடன் இருப்பவர்கள் இறந்ததாக பட்டியல் தயாரித்து உள்ளனர். எனவே, வரும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் இந்த குறைகளை களைய வேண்டும் எனவும், முறையான ஆவணங்களைக் கொண்டு வரும் மீனவர்களை சங்கங்களில் இணைக்க வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள்: தேங்காய்பட்டணம், இரையுமன் துறையில் அமைக்கப்பட்டு உள்ள கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மீன் விற்பனை செய்திட வேண்டும். தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் வள்ளத்தில் கொண்டு வரும் மீன்களை இறக்கி விற்பனை செய்திடவும், மீனவர்கள் தொழில் செய்ய வசதியாக நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் நிறுத்துவதற்கான வசதிகள் அமைத்திட வேண்டும்.

துறைமுகத்தில் மணலை அள்ளி ஆழப்படுத்த வேண்டும். தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பணிகளை விரைவில் முடித்திட வேண்டும். பணிகளை வடிவமைக்கும் பொறியாளரின் நேரடிப் பார்வையின் கீழ் பணிகள் செய்யப்பட வேண்டும். கடலை எல்லையாகக் கொண்டு கிழக்கு, மேற்காக சட்டமன்றத் தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும்.

மேல் மிடாலம் மீனவ கிராமத்தில் வரைவு திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். கடற்கரை மேலாண்மை வரைவு திட்ட வரைபடத்தில் கடற்கரை பகுதி, மக்கள் வாழும் பகுதி, பேரிடர் பகுதிகளைத் தனியாக அடையாளப்படுத்திட வேண்டும்.

AVM கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், கொல்லங்கோடு நகராட்சி மற்றும் தூத்தூர் பள்ளிக்கூடம் அருகில் நகரும் குப்பைத் தொட்டிகள் அமைத்திட வேண்டும். கேரளா பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சிக் கழிவுகள், தூத்தூர் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

மேல் மிடாலம் தூண்டில் வளைவுப் பணிகளை விரைவில் நடத்தி தர வேண்டும். முட்டம் பகுதியிலிருந்து திற்பரப்புக்கு கரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பேருந்து மீண்டும் இயக்கப்பட வேண்டும். கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க:வாஷிங்டன் வரை சென்ற பாஜக பிரச்சாரம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.