ETV Bharat / state

குமரி மாவட்ட அணைகளில் உபரிநீர் திறப்பு - திற்பரப்பு அருவியில் குளிக்க தொடரும் தடை! - TN Rain

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட அணைகளில் உபரி நீர் திறப்பு - திற்பரப்பு அருவியில் தொடரும் தடை!

author img

By

Published : Dec 7, 2022, 1:18 PM IST

கன்னியாகுமரி: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மலையில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் இருந்து கணிசமான அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறைக்கு வினாடிக்கு 967 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 448 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

அதேநேரம் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டியதாலும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.10 அடியை தாண்டியதாலும், அணையின் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து வினாடிக்கு 1,124 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் உபரிநீர் திறப்பு

இதனால் கோதையாறு, பரளியாறு, குழித்துறை மற்றும் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று (டிச.7) இரண்டாவது நாளாக திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் உள்பட சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்(Mandous Cyclone):எங்கெங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.