கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நான்கு ஓட்டுநர்கள், நான்கு உதவியாளர்கள், மூன்று இரவு நேர காவலர் பணிகளுக்கு இன்று (பிப்.22) நேர்முகத் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணிகளுக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், நேர்முகத் தேர்வுக்கு வந்த நபர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலூர் ஆட்சியர் உதவி