ETV Bharat / state

மாட்டுத் தீவனம் என்று கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி-கைபற்றிய காவல் துறையினர் - கன்னியாகுமரியில் ரேஷன் அரிசி கடத்தல்

கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்கு மாட்டு தீவனம் என்ற பெயரில் கடத்த முயன்ற நியாயவிலைக்கடை அரிசியை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ration rice smuggling  kanniyakumari ration rice smuggling  smuggling  ration rice smuggling from kanniyakumari  kanniyakumar news  kanniyakumari latest news  crime news  கன்னியாகுமரி செய்திகள்  கன்னியாகுமரியில் நியாயவிலை கடை அரிசி கடத்தல்  நியாயவிலை கடை அரிசி கடத்தல்  ரேஷன் அரிசி கடத்தல்  கன்னியாகுமரியில் ரேஷன் அரிசி கடத்தல்  குற்றச் செய்திகள்
மாட்டு தீவனம் என்று கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி...
author img

By

Published : Jun 25, 2021, 2:39 PM IST

கன்னியாகுமரி: கேரளாவிற்கு கன்னியாகுமரியிலிருந்து நியாயவிலைக்கடை அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் கடத்தல்காரர்கள் புது புது கோணங்களை பயன்படுத்தி நியாயவிலைக்கடை அரிசியை கேரளாவுக்குக் கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

வாகன தனிக்கையின்போது சிக்கிய லாரி:

உத்தரவின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, கேரளாவுக்கு நியாயவிலைக்கடை அரிசி கடத்திய நபர்களை பிடித்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 25) காலை நாகர்கோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாட்டுத்தீவனம் என்ற பெயரில் ஒரு டாரஸ் லாரி வந்தது. காவலர்களைப் பார்த்ததும் வாகனத்தின் ஓட்டுநர் லாரியிலிருந்து குதித்துத் தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் லாரியை சோதனை செய்தனர்.

சோதனையின்போது வண்டி முழுவதும் நியாயவிலைக்கடை அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். லாரியில் 30 டன் நியாயவிலைக்கடை அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் அந்த அரிசி கன்னியாகுமரி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டாறு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்றே கடைசி நாள் - 'நீங்க வாங்கியாச்சா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.