கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதி ராம்குமார் (25), கவிதா (23). இவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
குடும்பத் தகராறு
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளார். ராம்குமாரின் தாயார், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) கவிதாவின் மாமியார் சந்தைக்குச் சென்று திரும்பியபோது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
9 மாத கைக்குழந்தை இறப்பு
பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கவிதா தூக்கில் தொங்கிய நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகே சேலையால் கழுத்து இறுக்கப்பட்டு குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற அஞ்சுகிராமம் காவல் துறையினர், கவிதாவை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.