கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் இடைவிடாது சுமார் 4 மணி நேரமாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதற்கிடையில், இன்றும் அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.
மேலும் தமிழ்நாடு ,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து 5 நாள்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், தற்போது மாவட்டத்தில் பரவலாக நேற்று முதல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இன்றும் அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் தோவாளை பகுதியில் 34 வீடுகள் சேதமடைந்தன.
அதேபோல் இன்று (நவ.25) காலை முதல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் குளக்கரை பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மீட்பு பணி மேற்கொள்ள தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!