கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் அதையொட்டியுள்ள ரயில் தண்டவாள பகுதிகளை ட்ரோனில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
குமரியில் கடந்த சில நாட்களாக ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், தண்டவாளங்கள், ரயில் நிலைய பகுதிகளில் ஏதேனும் நாச வேலைகள் நடைபெற்றுள்ளதா என்பதையும், நாகர்கோவில் – சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சரக்கு ரயில் போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையமான எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் ஆளில்லா விமானத்தில் கேமரா மூலம் ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிக்கு 25 ஆளில்லா விமானம்!