ETV Bharat / state

மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி! - Rahul Gandhi tribute to Ex MP Vasantha Kumar memorial

கன்னியாகுமரி: மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மலர்த்தூவி மரியாதை செலுத்தி, மணிமண்டபத்திற்கான அடிக்கல்லைத் திறந்துவைத்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Mar 1, 2021, 4:31 PM IST

குமரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணனைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி
இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா நோய்த்தொற்று காலத்தில் மாவட்ட மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வசந்த குமார் எம்பி செய்துவந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வசந்தகுமார் எம்பி மரணமடைந்தார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 1) குமரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் வந்துள்ள அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த வசந்தகுமார் எம்பியின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குக் கட்டப்பட உள்ள மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை அவர் திறந்துவைத்தார். பின்னர் வசந்தகுமாரின் மனைவி, அவரது மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் உள்பட அவரது குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.