கன்னியாகுமரி மாவட்டம், கலுங்கடி அருகே ஷலோம் நகர் இருக்கிறது. இங்கு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதனையடுத்து கலுங்கடி ஊர் தலைவர் ஜம்பு, அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவர்கள் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்கள்,செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வடசேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர், உறுதியளித்ததையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: செல்போன் கோபுரம் அமைக்கத் தடை - பொதுமக்கள் சாலை மறியல்