கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டுர்னிமடம் பகுதியில் யூனிக் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 30 மாதங்கள் கழித்து கட்டிய தொகையுடன் அதிக வட்டி தரப்படும் என்று நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி நாகர்கோவில், திங்கள் நகர், மார்த்தாண்டம், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர்.
இந்நிலையில் மாதாந்திர வைப்பு முதிர்ச்சி அடைந்த பின்னரும் இந்த நிறுவனம் பணத்தை திருப்பி தராமல் பொதுமக்களை கடந்த சில மாதங்களாக அலைகழித்தது. இதை தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று, கட்டிய பணத்தை கேட்டபோது அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏழுகோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.