கன்னியாகுமரி: தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தின் தென் மண்டல மாநாடு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் இச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், “கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் இயங்கி வருவதால், இத்துறை நசுக்கப்பட்டு வருகிறது. இத்துறைக்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, கல்வி மற்றும் பதவிக்கான தகுதியான ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே தகுதியான ஊழியத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் இந்த ரேஷன் கடைகளை, தனித்துறையாக அமல்படுத்துவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதனை அவர் உடனே நிறைவேற்றித் தர வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நியாய விலைக்கடைகளில் கீழே சிந்திய பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது!